Type Here to Get Search Results !

உங்கள் Android Phone ன் Storage Full ஆகிவிட்டதா? சரி செய்யலாம் வாங்க

0

உங்கள் Android Phone ன் Storage Full ஆகிவிட்டதா? சரி செய்யலாம் வாங்க


ஒரு நாள் காலையில் வழக்கம்போல் என் போனை எடுத்தேன். Notification bar - கீழே இழுத்தவுடன் மேலே சிவப்பு நிறத்தில் ஒரு எச்சரிக்கை தெரிந்தது.

**“Storage Space Running Out.”**

இதை உடனே சரி செய்யவிட்டால் இன்னும் சில நாட்களில் போனில் பல பிரச்சனைகள் தொடங்கிவிடும்.

Storage Full ஆனால் என்ன நடக்கும்?

Storage முழுவதும் நிரம்பிவிட்டால் பின்வரும் சிக்கல்கள் ஒவ்வொன்றாக தோன்ற ஆரம்பிக்கும்.


1.Apps update
ஆகாமல் சுற்ற ஆரம்பிக்கும்

2.Play Store error காட்ட ஆரம்பிக்கும்

3.Photo எடுக்கும்போது “Not enough storage” என்று வரும்.. சில நேரங்களில்  Camera App Open ஆகாமல் கூட போகும்..

4.Phone மெதுவாக இயங்க ஆரம்பிக்கும் பின் hang ஆகும்

5.சில Apps திறக்கவே முடியாதவாறு திணற ஆரம்பிக்கும்..

இதற்கெல்லாம் என்ன காரணம்  தெரியுமா?
 

 ** போன் பழுதாகவில்லை..போனில் தொழில்நுட்ப கோளாறு இல்லை.. ஆனால் நாமே சேர்த்துக் கொண்ட தேவையில்லாத கோப்புகள்தான் இதற்கு  காரணம்.**



இந்த Storage Full பிரச்சனையை நான் ஒருமுறை அல்ல, பலமுறை சந்தித்திருக்கிறேன். நீங்களும் அப்படித்தான்.. ஆரம்பத்தில் குழப்பமாகவும், பிறகு எரிச்சலாகவும் இருக்கும். ஆனால் பின்னர் புரியும்இது பெரிய technical issue அல்லமிது ஒரு **கவனக்குறைவு பிரச்சனை** மட்டுமே என்பது..

 

இந்த கட்டுரையில், என் அனுபவத்தின் அடிப்படையில் storage எதனால் நிரம்புகிறது, அதை எப்படி எளிதாக சரி செய்யலாம், என்பதைப் பார்க்கலாம் வாங்க..


Storage ஏன் இவ்வளவு சீக்கிரம் நிரம்புகிறது?

பலருக்கும்  சந்தேகம் இருக்கும்.  அது என்ன என்றால்?

நான் பெரிய அளவுடைய படங்களை பதிவிறக்கம் செய்யவில்லையே.  அவ்வாறு இருக்கும்பட்சத்தில் எப்படி storage full ஆகும்?”

நானும் தே கேள்வியை என்னுள் பலமுறை கேட்டிருக்கிறேன்.

ஆனால் உண்மையில் storage-ஐ நிரப்புவது ஒரு பெரிய file இல்லை. நமது அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் Phone-இல் சேர்ந்து கொண்டே இருக்கும் சிறு சிறு விஷயங்கள் தான் காரணமாக உள்ளது. அவற்றில் சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு :

  • Camera-வில் எடுத்த நூற்றுக்கணக்கான புகைப்படங்கள்
  • HD தரத்திலான வீடியோக்கள்
  • WhatsApp forwarded வீடியோக்கள்
  • Instagram-இல் பதிவிறக்கம் செய்த புகைப்படங்கள், வீடியோக்கள்
  • Screenshot-கள்
  • PDF கோப்புகள்
  • APK கோப்புகள்
  • Apps சேமிக்கும் cache

நாம் தினமும் 2–3 புகைப்படங்கள்  எடுத்தாலும், ஒரு மாதத்தில் அது 100-க்கும் மேல் ஆகிவிடுகிறது. அதே போல், ஒரு வாரத்தில் 10–15 எண்ணிக்கையில் WhatsApp video-க்கள் வந்தாலும், ஒரு மாதத்தில் அது 1GB-க்கும் மேல் ஆகிவிடுகிறது. இவ்வாறு சேமிப்பகம் நிறைந்து கொண்டே இருக்கும்.   நாம் அதை கவனிக்காமல் இருந்து விடுகிறோம்.

Storage நிரம்புவது மெதுவாக நடக்கும். ஆனால் Storage Full  என்ற எச்சரிக்கை மட்டும் திடீரென்று நாம் எதிர்பார்க்காத போது வந்துவிடும்.


முதலில் பதட்டம் ஆகாதீர்கள் – Storage Breakdown பாருங்கள்

நான் ஆரம்பத்தில் செய்த தவறு என்ன தெரியுமா?

Storage Full என்ற எச்சரிக்கையை பார்த்தவுடனேயே தோராயமாக கோப்புகளை நீக்கம் செய்ய ஆரம்பித்துவிடுவேன். ஆனால் அது சரியான வழி இல்லை என்று அறிந்து கொண்டேன்.  

 சரியான வழி:

Settings Storage.  

அமைப்புகள் சென்று அதில் சேமிப்பகத்தை கிளிக் செய்யவும். அங்கே தெளிவாக பின்வருமாறு breakdown காட்டும்:

  • செயலி (Apps)
  • புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் (Photos & Videos)
  • ஒலி (Audio)
  • பதிவிறக்கங்கள் (Downloads)
  • System

    ஒரு நாள் எதார்த்தமாக WhatsApp-இன் Storage பார்க்கும்போது அந்த செயலியில் மட்டும் 6GB நிறைவடைந்து இருந்தது.  அதைப் பார்த்ததும் நான் அதிர்ச்சியடைந்தேன். எனக்கு தெரியாமலேயே background-இல் கோப்புகள் சேர்ந்து கொண்டிருந்தது. அந்த நாள் தான்,  நான் ஒரு முக்கியமான பாடத்தை கற்றுக்கொண்டேன். அது என்னவென்றால், சேமிப்பகத்தை குறைப்பதற்காக  எந்த ஒரு கோப்பையும் Delete செய்யும் முன், எந்த கோப்பு அதிக இடம் எடுத்து இருக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும்.  அதன் பிறகே, அந்த கோப்பு நீக்கம் செய்யப்பட வேண்டும்.


Gallery சுத்தம் செய்வது மிக பெரிய மாற்றம் தரும்

          என் அனுபவத்தில் Storage யை குறைப்பதற்கு அதிகமாக உதவியது Gallery பகுதியை சுத்தம் செய்தது தான். நமது அன்றாட வாழ்க்கையில் ஒரு சம்பவத்தை உதாரணமாக எடுத்துக்கொள்வோம்.  ஒரு நிகழ்ச்சிக்கு செல்கிறோம்.  அங்கே ஒரே pose-க்கு 10 புகைப்படங்கள் எடுக்கிறோம். பிறகு அதில் 1 அல்லது 2 புகைப்படங்களை மட்டுமே சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்கிறோம். மீதமுள்ள  8 புகைப்படங்கள் phone-இல் தான் இருக்கும்.

அதேபோல்:

  • Blur photo
  • Dark photo
  • Duplicate photo
  • Random video
  • தேவையில்லாத meme images–இவ்வாறு அதிக எண்ணிக்கையில் Storage நிறைந்துவிடும்.

நான் ஒரு நாள் முழுவதும் Gallery open செய்து மெதுவாக review செய்தேன். அவசரம் இல்லாமலும் அமைதியாகவும்  பார்த்தேன். இவ்வாறு நிதானமாக பார்க்கும்பொழுது தேவையில்லாத புகைப்படங்களையும்  வீடியோக்களையும் நீக்கம் செய்தேன். அந்த ஒரு cleaning session-இல் கிட்டத்தட்ட 3GB free ஆனது. அது மட்டுமல்லாமல் phone-இன் இயக்க வேகம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகியது.


Screenshot- அமைதியான storage கொள்ளையன்

நாம் screenshot எடுப்பது மிகவும் எளிமையான செயல்.  இரண்டு பொத்தான்களை  அழுத்தினால் போதும் எளியதாக screenshot வந்துவிடும். ஆனால் அதை நீக்கம் செய்ய மறந்துவிடுகிறோம். நான் screenshot folder open செய்த போது என்ன பார்த்தேன் தெரியுமா?

  • Payment receipt
  • OTP
  • Random Instagram post
  • WhatsApp chat
  • Bank transaction proof

இவற்றுள்  பாதி ஒரு வாரத்திற்குப் பிறகு தேவையில்லாதவை. நான் screenshot folder மட்டும் clean செய்த பிறகு 1GB அளவிற்கு சேமிப்பகத்தில் இடம் அதிகமானது. அந்த நாள் நான் என்னையே கேள்வி கேட்டுக்கொண்டேன்.  இந்த அளவுக்கு தேவையில்லாத விஷயங்களை நான் ஏன் சேமித்து வைத்திருக்கிறேன்?”


App Cache – பயப்பட வேண்டிய விஷயம் இல்லை

நான் ஆரம்பத்தில் cache clear செய்ய யோசித்தேன்.  “Messages delete ஆகுமோ?” “Login போய்விடுமோ?” என்றெல்லாம் என்னுள் நிறைய கேள்விகள் எழும்பின.  ஆனால்  உண்மையில் cache என்பது temporary files தான். App வேகமாக செயல்படுவதற்கு உதவுவதற்காக சேமிக்கும் தகவல். 

அதனை Clear செய்ய :

Settings Apps Select app Storage Clear Cache 

இவ்வாறு செய்வதன் மூலம்,

  • Photos delete ஆகாது
  • Messages delete ஆகாது
  • Login delete ஆகாது

அதுமட்டுமல்லாமல்,  Browser, Instagram, Facebook, WhatsApp — இவைகளின் cache சில மாதங்களில் பல நூறு MB ஆகிவிடும். இதனை ஒரு முறை clear செய்தாலே அதிகளவில் சேமிப்பகத்தின் அளவு அதிகமாக கிடைக்கும்.


பயன்படுத்தாத செயலிகள் (Apps)

ஒரு நாள் நான் Apps list open செய்து பார்த்தேன். அப்போது தான் பல செயலிகளை நான் 6 மாதங்களாக பயன்படுத்தவில்லை என்ற விவரம் அறிந்தேன். அவற்றுள் சில உதாரணங்களுக்காக பின்வருமாறு :

  • Install செய்த game
  • Photo editing app
  • Random utility app
  • Offer பார்க்க install செய்த shopping app

இவ்வாறு பயன்படுத்தப்படாத செயலிகளை முதலில் uninstall செய்தேன்.  இதை செய்த உடன் 2GB அளவில் சேமிப்பகத்தின் இடம் காலியானது. நாம் பயன்படுத்தாத app phone-க்கு தேவையில்லை என்று அன்று தான் நான் புரிந்து கொண்டேன்.


WhatsApp – Storage-க்கு பெரிய காரணம் :

என் phone storage full ஆக முக்கிய காரணம் WhatsApp தான். ஒரு நாள் WhatsApp-இல் Settings Storage and Data Manage Storage சென்று பார்த்தேன்.  அங்கே என்னவெல்லாம் இருந்தது என்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

  • 100MB-க்கும் மேல் இருக்கும் வீடியோக்கள்
  • பலமுறை forward ஆன கோப்புகள்
  • பழைய ஒலி குறிப்புகள்(voice notes)
  • பல வருடங்களுக்கு முன் வந்த வீடியோக்கள்

இவை அனைத்தும் delete ஆகாமல் இருந்தது. WhatsApp-இல் auto-download என்ற  Option On-இல் இருந்தால், எல்லா புகைப்படங்களும், வீடியோக்களும் மற்றும் கோப்புகளும்  phone-இல் தானாகவே save ஆகும். நான் தேவையில்லாத கோப்புகளை நீக்கம் செய்த பிறகு தான் பெரிய அளவு இடம் காலியானது.


Downloads Folder – மறக்கப்பட்ட பகுதி

File Manager → Downloads. பதிவிறக்கம் செய்யப்பட்ட பகுதியை நாம் மறந்தே விடுகிறோம். அங்கே என்ன இருக்கும்?

  • பழைய கோப்புகள்
  • Ticket copy
  • Bank statement
  • APK file
  • ZIP file

இவ்வாறு உள்ளவற்றை ஒரு முறை பதிவிறக்கம் செய்ததும் மறந்து விடுகிறோம்.  இதன் தேவை முடிந்த பிறகு இதனை அழிக்காமல் அப்படியே விட்டுவிடுகிறோம்.   இதன் காரணமாகவும் Phone-இன் சேமிப்பகம் நிறைந்துவிடுகிறது.  இவற்றையெல்லாம் நான் delete செய்த போது 500MB-க்கும் மேல் free ஆனது.


Built-in Cleaner பயன்படுத்தலாம்

இப்போது பல Android phone-களில் built-in cleaner இருக்கும்.

Settings → Storage → Cleanup.  இதை click செய்து பார்த்தால் அது பின்வரும் கோப்புகளை scan செய்து காட்டும்.

  • Junk files
  • Duplicate files
  • Large files

இவ்வாறு இருக்கும் கோப்புகளை சில நிமிடங்களில் clean செய்து விடலாம். ஆனால்,   நான் ஒருமுறை அனைத்து கோப்புகளையும் ஆராய்ந்து பார்ப்பதையே விரும்புகிறேன். ஏனெனில் அப்போது தான் எந்த கோப்புகளை நீக்கம் செய்கிறோம் என்ற முழு தகவல் நமக்கு கிடைக்கும்.


SD Card இருந்தால் உதவும்

உங்கள் phone-க்கு memory card slot இருந்தால் Photos, Videos போன்றவற்றை memory card-க்கு மாற்றம் செய்யலாம்.  Internal storage சற்று குறையும். ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.  Apps மற்றும் system files internal storage-இல் தான் இருக்கும்.  SD card முழு தீர்வு அல்ல.  ஆனால் சேமிப்பகத்தை பாதுகாக்க ஒரு உறுதுணையாக இருக்கும் அமைப்பு ஆகும்.


Backup செய்து பின் delete செய்யுங்கள்

புகைப்படங்களை நீக்கம் செய்ய மனம் வராதவர்கள் நிறைய நபர்கள் உண்டு.  நானும் அவர்களைப் போல தான்.  அதனால்,

  • Google Photos
  • Google Drive
  • External hard disk

போன்றவற்றில் backup எடுத்து வைத்த  பிறகு புகைப்படங்களையும், கோப்புகளையும் நீக்கம் செய்யலாம்.  இவ்வாறு செய்யும் போது Storege பாதுகாப்பாகவும், Mobile வேகமாகவும் செயல்படும்.


Factory Reset – கடைசி வழி

எல்லா வழிகளையும்  முயற்சி செய்த பிறகும்,  phone மெதுவாக இயங்கினால்  factory reset செய்யலாம். ஆனால் இது பெரிய முடிவு.  ஏனென்றால், Phone ல் உள்ள அனைத்து தகவல்களும், செயலிகளும் முழுவதுமாக அழிந்து விடும்.  இந்த செயலை செய்வதற்கு முன் Backup எடுக்க வேண்டும். மறந்தும் கூட Backup எடுக்கமால் Reset செய்ய வேண்டாம்.  Reset செய்த பிறகு phone ஏறக்குறைய புதியது போல மாறிவிடும். ஆனால், இதை கடைசி வழியாகவே வைத்துக்கொள்ளுங்கள்.


Storage free-ஆக  வைத்திருப்பது ஏன் முக்கியம்?

Phone storage முழுவதும் நிரம்பிவிட்டால் பின்வரும் இடையூறுகளை நாம் சந்திக்க நேரிடும்.

  • System update ஆகாது
  • App update ஆகாது
  • Performance குறையும்
  • Battery கூட சீக்கிரம் குறைந்து விடும். அதாவது drain-ஆகிவிடும்.

நான் இப்போது குறைந்தது 15–20% storage free-ஆக வைத்திருக்க முயற்சி செய்கிறேன்.

ஒரு அலமாரி முழுவதும் பொருள்கள் நிரம்பிவிட்டால் எந்த பொருளையும் எடுக்க சிரமமாக இருக்கும்.  அதே போல் தான் Phone-க்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


Storage free செய்தும் phone slow இருந்தால்?

Storage மட்டும் காரணமாக இருக்காது.  வேறு சில காரணங்களும் இருக்கும். அவை :

  • குறைந்த RAM
  • Background apps
  • பழைய Android version

ஒரு simple restart கூட சில நேரம் நல்ல மாற்றம் தரும்.


நான் இப்போது பின்பற்றும் பழக்கம்

ஒவ்வொரு இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை Phone ன் இயக்கம் பற்றி ஆராய்ந்து தெரிந்து கொள்வேன்.

  • Gallery clean
  • Screenshot delete
  • Cache clear
  • WhatsApp media check
  • Downloads clean

இந்த செயல்களை 10 முதல் 15 நிமிடங்கள் செய்தாலே போதுமானது.  Storage full என்ற எச்சரிக்கை மிகவும் அரிதாக தான் வரும்.


என் இறுதி கருத்து

“Storage Full” என்றால் phone தொழில்நுட்பக்கோளாறு அடையவில்லை.  அது நமக்கு முன்கூட்டியே எச்சரிக்கை செய்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

நாம் வீட்டை சுத்தம் செய்வது போல phone-க்கும் சுத்தம் தேவை. பயப்பட வேண்டாம்.
அமைதியாக check பண்ணுங்கள். தேவையில்லாததை நீக்குங்கள். Phone உடனே நல்ல வேகத்துடன் இயங்கும். சில நேரம் பெரிய பிரச்சனைக்கு தீர்வு மிகவும் சாதாரணமாகவே அமையும்.
கொஞ்சம் கவனம் ! கொஞ்சம் சுத்தம்! அதுவே போதும்!

நீங்களும் இதே பிரச்சனை சந்தித்து இருந்தால், இந்த அனுபவம் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

ஒரு நாள் warning வரும் வரை காத்திருக்க வேண்டாம். இன்று ஒரு 10 நிமிடம் எடுத்துக் கொண்டு உங்களது Mobile Storege யை சேமிப்பகத்தை ஆராய்ந்து பாருங்கள்.

நம்புங்கள் — உங்கள் Mobile யை நீங்கள் பார்த்துக்கொண்டால் உங்கள் Mobile வேகமாக இயங்குவதன் மூலம் உங்களுக்கு நன்றி சொல்லும்.

Top of Form

Bottom of Form

 


  • Older

    உங்கள் Android Phone ன் Storage Full ஆகிவிட்டதா? சரி செய்யலாம் வாங்க

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.